லீக்கானது `பீஸ்ட்' படத்தின் கதை: படக்குழு அதிர்ச்சி

லீக்கானது `பீஸ்ட்' படத்தின் கதை: படக்குழு அதிர்ச்சி

`பீஸ்ட்' படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், அப்படத்தின் கதை லீக்காகி இருப்பது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள கேலக்ஸி திரையரங்கம் தங்களது இணையதள பக்கத்தில் `பீஸ்ட்' படத்தின் கதையை முழுவதுமாக வெளியிட்டு இருக்கிறது. அதில், நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவர்களது அமைப்பின் தலைவனை விடுவிக்கக்கோரி அரசுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். ஆனால் அரசாங்கமோ அந்த பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவனை விடுவிக்க மறுக்கிறது. ஒரு கட்டத்தில் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட இடத்தில் அரசின் உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான விஜய் இருப்பது தெரியவருகிறது.

இதனையடுத்து பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க, அவரது உதவியை அரசு நாடுகிறது. இதன் பின்னர் அந்த முன்னாள் அதிகாரி, பயங்கரவாதிகளுக்கு எதிராக தனது மிஷனை தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் நிலைமை பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைய, அந்த அமைப்பின் தலைவனை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இச் சூழலில் சாமர்த்தியமாக செயல்படும் அந்த முன்னாள் உளவு அதிகாரி பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட மக்களை மீட்பதோடு, பயங்கரவாதிகளையும் தீர்த்துக்கட்டுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஸ்ட் படம் வரும் 13-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் முழுக் கதையும் வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in