சமந்தாவுக்காக ஒன்று சேர்ந்த முன்னணி நடிகர்கள்!

சமந்தாவுக்காக ஒன்று சேர்ந்த முன்னணி நடிகர்கள்!

நடிகை சமந்தாவுக்காக முன்னணி நடிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

நடிகை சமந்தா கைவசம் தற்போது 'யசோதா' திரைப்படம் உள்ளது. அடுத்த மாதம் 11ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் முதல் முறையாக வாடகைத் தாயாக நடிகை சமந்தா நடித்துள்ளார். படத்தின் ட்ரைய்லர் இன்று வெளியாகி உள்ள நிலையில் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில் நடிகர் சூர்யா, கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் நடிகை சமந்தாவிற்காக 'யசோதா' டீசரை வெளியிட்டுள்ளனர்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ‘பான் இந்தியா’ படமாக வெளியாக இருக்கிறது. சோஷியல் மீடியாவில் கடந்த சில மாதங்களாக ஆக்டிவாக இல்லாத சமந்தா 'யசோதா' படம் தொடர்பான பதிவுகளை மட்டும் பதிவிட்டு வருகிறார். 'யசோதா' தவிர்த்து விஜய் தேவரகொண்டாவுடன் 'குஷி' படத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. இதன் அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும், நடிகர் விஜய்க்கு வில்லியாக 'தளபதி 67' நடிக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in