நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்புக் கேட்ட சட்டக்கல்லூரி மாணவர் சங்கம்

அபர்ணா பாலமுரளி
அபர்ணா பாலமுரளி

பட ப்ரமோஷனுக்காக எர்ணாகுளம் சட்டக்கல்லூரிக்கு சென்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் அத்துமீறியிருந்தார். இந்தக் காட்சிகள் இணையத்திலும் வைரலானது. இந்த நிலையில் அபர்ணா பாலமுரளியிடம் வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்து கல்லூரியின் மாணவர் சங்கம் சார்பில் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி தமிழ் மற்றும் கேரளா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 'சூரரைப்போற்று' படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ள இவர், தற்போது கேரள திரைப்படமான `தங்கம்' திரைப்படத்தில் வினித் சீனிவாசனுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். `தங்கம்' திரைப்படத்திற்காக ப்ரமோஷன் வேலைகள் நடந்துவருகிறது.

அந்த வகையில் எர்ணாகுளத்தில் இயங்கிவரும் சட்டக்கல்லூரி ஒன்றில் படத்தின் அறிமுக விழா நடந்தது. இந்த அறிமுக விழாவில் படத்தின் கதாநாயகன் வினித் சீனிவாசன் கதாநாயகி அபர்ணா பாலமுரளி மற்றும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

விழா தொடங்கிய சிறிது நேரத்தில் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு சிறிய பூங்கொத்து கொடுத்ததுடன் அவரின் மேல் கையைப் போட்டு சேர்ந்து புகைப்படம் எடுக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணா, அதிர்ச்சியில் அந்த மாணவரின் கையைப் பிடித்து தள்ளினார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டக் கல்லூரி மாணவரின் செயலுக்கு படக்குழு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, நடிகை அபர்ணா பாலமுரளியிடம், கல்லூரி சார்பாக அந்த மாணவர் மன்னிப்பு கேட்டுகொண்டார். ஆனால், அப்போதும் அந்த மாணவர் கைகுலுக்க முயன்றார். ஆனால் அபர்ணா கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் எர்ணாகுளம் சட்டக்கல்லூரி மாணவர் யூனியன் சார்பில், முகநூல் பக்கத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்புக்கேட்டு பதிவு வெளியிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in