‘’நான் மலிவான நடிகையா?’’ -நெட்டிசனை விளாசிய லாவண்யா திரிபாதி

நடிகை லாவண்யா திரிபாதி
நடிகை லாவண்யா திரிபாதி

’மலிவான நடிகை’ என்று விமர்சித்தவரை, நடிகை லாவண்யா திரிபாதி சரமாரியாக விளாசியுள்ளார்.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில், லாவண்யா என்ற மாணவி கடந்த 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். மதம்மாற வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. பின்னர், விடுதி காப்பாளர் அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததாகவும், சரியாக படிக்க முடியாது என நினைத்து விஷம் குடித்ததாகவும் லாவண்யா கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

லாவண்யா திரிபாதி
லாவண்யா திரிபாதி

இந்த வழக்கு குறித்து சமூக வலைதளங்களிலும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். சிலர், தற்கொலை செய்துகொண்ட லாவண்யாவுக்குப் பதிலாக, நடிகை லாவண்யா திரிபாதி என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டனர். ஒருவர், “லாவண்யா திரிபாதி ஒரு நடிகை. அவர் எந்த தியாகத்தையும் செய்யவில்லை. அதனால் தற்கொலை செய்துகொண்ட லாவண்யாவை, மலிவான இந்த நடிகையுடன் ஒப்பிட வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

இதில் ’மலிவான நடிகை’ என்ற வார்த்தை லாவண்யா திரிபாதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த நெட்டிசனை அவர் விளாசியுள்ளார். “உங்களைப் போன்றவர்கள், பெண்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்தான் மதிக்கத் தொடங்குகிறீர்கள். மலிவானவள் என்று அழைப்பதற்கு முன், எப்படி மதிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஆனால், இதுதான் நம் சமூகத்தின் உண்மை” என்று அவர் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in