
சென்னை வருகை தந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை சந்தித்தனர்.
சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்துள்ளார்.
நேற்று மாலை 6.50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்த திரவுபதி முர்மு சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு ஓய்வெடுத்த அவர் இன்று காலை 9 மணி முதல் 9.30 மணி வரை முக்கிய பிரமுகர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, நடிகையும் எக்ஸ் எம்.பியுமான வைஜெயந்திமாலா, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி ஆகியோர் திரவுபதி முர்முவை இன்று காலை 9 மணிக்கு ராஜ் பவனில் சந்தித்தனர். இந்த திடீர் சந்திப்பு திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பிறகு கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். இதை தொடர்ந்து மதியம் விமானப்படையின் தனி விமானம் மூலமாக டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். குடியரசு தலைவர் வருகையை ஒட்டி ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!