இந்தியில் ரீமேக்காகும் அஜித் படம்... ஹீரோ இவரா?

நடிகர் அஜித்
நடிகர் அஜித்

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’என்னை அறிந்தால்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித், த்ரிஷா, அனுஷ்கா ஆகியோரது நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியானத் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. படம் வெற்றிப் பெற்ற நிலையில் தற்போது அது இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அஜித்தின் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்க இருப்பதாகவும் அதை கெளதம் மேனன் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்தான அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும்.

’என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்-த்ரிஷா
’என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்-த்ரிஷா

'என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்- த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதேபோல, அஜித்தின் மகளாக நடித்திருந்த அனோஷ்காவும் அதன் பிறகு இணையத்தில் கவனம் ஈர்த்தார். படத்தின் இரண்டாம் பாதியில் அனுஷ்காவும் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

’என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்-அனுஷ்கா
’என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்-அனுஷ்கா

இதற்கு முன்பு அஜித்தின் ‘வீரம்’ திரைப்படம் இந்தியில் ‘கிஸி கா பாய், கிஸி கி ஜான்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதிலும் சல்மான்கான் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல, கெளதம் மேனன் தன்னுடைய நீண்ட நாள் படமான ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடும் வேலையில் பிஸியாக உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in