’அப்பா வந்தா ஆச்சர்யப்படுத்தலாம்...’ மகள் குறித்து நடிகர் சேதுராமன் மனைவி உருக்கம்!

சேதுராமன் - உமா
சேதுராமன் - உமா

”1461 நாட்கள் 4 வருடங்கள் ஆகிவிட்டது. நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும் உங்கள் நினைவுகள் எப்போதும் எங்களை வழிநடத்தும்” என மறைந்த நடிகர், மருத்துவர் சேதுராமனின் மனைவி உமா உருக்கமானப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். சேதுராமனின் பழைய வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

‘கண்ணா லட்டு திங்க ஆசையா?’ படம் மூலம் நடிகராக அடியெடுத்து வைத்த மருத்துவர் சேதுராமன், அதன் பிறகு ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், தொடர்ந்து மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2016ல் உமா என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால், 2020ல் கொரோனா சமயத்தில் திடீரென மாரடைப்பால் காலமானார். சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்த சேதுராமனின் திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மறைவின் போது மனைவி உமா இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்திருந்தார்.

சேதுவின் மறைவுக்குப் பின்பு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சேதுவின் பழைய வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை உமா பகிர்ந்துள்ளார்.

”1461 நாட்கள் 4 வருடங்கள் ஆகிவிட்டது. உடலளவில் நீங்கள் பிரிந்தாலும் உங்களது நினைவுகள் வலுவாக எங்களை வழிநடத்துகிறது. வாழ்க்கை குறுகியது என்பதை ஏற்றுக் கொள்வது எளிதல்ல. எங்களுடைய கடினமான சமயத்தில் எதோவொரு வகையில் எங்களுக்கு வழிகாட்டி இருக்கிறீர்கள்.”

குடும்பத்துடன் சேது...
குடும்பத்துடன் சேது...

“மார்ச் 25, 2020 அன்று, ’கோவிட் லாக்டவுனுடன் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்து பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. ஏன் குடும்பத்தை தனியாக விட நினைக்கிறார்கள்?’ என்று நீங்கள் சொல்லி மக்களுக்கு பாசிடிட்வான எண்ணங்களை கொடுக்க வேண்டும் என்று நிறைய வீடியோக்களைப் பகிர ஆரம்பித்தீர்கள். கடினமான சமயத்தில் இதையெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன். ‘அப்பா எப்போது வருவார்? அவரை நாம சர்ப்ரைஸ் செய்யலாம்’ என சஹானா கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அவளுக்கு தெரியாது... அப்பா வந்தால் தானே என்று...

அவளும் நானும் நிச்சயம் ஒருநாள் சொர்க்கத்தில் உங்களை சந்திப்போம். அதுவரை எங்களை வழிநடத்திக் கொண்டே இருங்கள்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in