பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடம்

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரபல இந்திப் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (92). இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இவர், இந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். பாடலுக்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். கரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல்நிலை மேம்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் அவர், உடல்நிலை இப்போது கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டுள்ளது எனவும், அவர் இன்னும் ஐசியுவில்தான் இருக்கிறார் என்றும் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பிரதித் சம்தானி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in