திரைப்படங்களுக்கு இணையாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நடிகைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்து இந்த வருடம் ஹிட்டடித்த சின்னத்திரை நடிகைகள் யார் யார் என பார்க்கலாம் வாங்க...
ஜீ தமிழின் 'யாரடி நீ மோகினி’யில் வில்லியாக வலம் வந்து ரசிகர்களின் மனசில் இடம்பிடித்த சைத்ரா ரெட்டி கன்னட ரசிகர்களின் பேவரைட் நடிகை. ’கல்யாணம் முதல் காதல் வரை’, ‘சுப்ரதா பரிணயம்’ என தமிழ், தெலுங்கு சீரியல்களில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தாலும் சைத்ராவை, தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக்கியது ‘கயல்’. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ சைத்ராவின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே இன்றைக்கும் பெரும் வரவேற்பு.
குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான சுஜிதா, அடுத்தடுத்து படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருந்தாலும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் வரை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது.
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணியாக, குடும்பத்தில் ஒருவராக வலம் வந்தார் சுஜிதா. சமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நிறைவடைந்ததை அடுத்து, அடுத்த புது சீரியல் குறித்தான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
’ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா, இரண்டாவது பிரசவத்திற்காக ‘ராஜா ராணி2’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்திருந்தார். அதன் பின்னர், ஆல்யா மீண்டும் எண்ட்ரி கொடுத்த சீரியல் தான் ‘இனியா’. சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் நாயகியாக வலம் வரும் ஆல்யா, இந்த வருடமும் ரசிகர்களிடையே தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார்.
விஜய் டிவியின் ’பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சுசித்ரா, சராசரி பெண்ணாக, பொறுப்பான குடும்பத்தலைவியாக பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் எளிதில் ரசிகர்களின் மனசில் இடம்பிடித்தார். சுசித்ராவை அத்தனை சீக்கிரத்தில் தங்களோடு பொருத்திப் பார்த்துக் கொண்டார்கள் தமிழக இல்லத்தரசிகள். மிகை நடிப்பு என சுசித்ராவின் மீது விமர்சனங்கள் எழுந்தாலும் பிடித்த சின்னத்திரை நடிகைகளின் லிஸ்ட்டில் சுசித்ரா கெத்து காட்டி வருகிறார்.
சமூகவலைதளம் மூலம் பிரபலமான கேப்ரியல்லா, ‘சுந்தரி’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் பாகம் ஹிட்டித்து விட, இரண்டாவது பாகத்திலும் தனது நேர்த்தியான நடிப்பால் சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்து வருகிறார்.
சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் மூலம் புகழ் பெற்ற பிரியங்கா நல்காரி, அதன் பின்னர் ஜீ தமிழில் ‘சீதா கல்யாணம்’ சீரியலில் நடித்தார். கல்யாணத்திற்காக இடையில் பிரேக் எடுத்த பொண்ணு, மீண்டும் ஜீ தமிழில் ‘நள தமயந்தி’ யில் நடித்து வருகிறார். ரசிகர்களின் பேவரைட் நாயகிகளின் லிஸ்ட்டில் பிரியங்காவுக்கும் இடம் இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
ஜனவரி 3ம் தேதி சென்னையில் புத்தக கண்காட்சி... முதல்வர் துவங்கி வைக்கிறார்!
பதற்றத்தில் திமுக... 'குற்றவாளி’ பொன்முடி... சொத்து குவிப்பு வழக்கில் இன்று காலை தண்டனை அறிவிப்பு!
வெள்ளப் பாதிப்பு: தென் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு!