லாஸ்லியா நடிக்கும் த்ரில்லர் படம் `அண்ணபூர்ணி'

லாஸ்லியா நடிக்கும் த்ரில்லர் படம் `அண்ணபூர்ணி'

த்ரில்லர் படமாக உருவாகும் `அண்ணபூர்ணி' படத்தில் லாஸ்லியா நடிக்க உள்ளார்.

கே.எச். பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ஓடிஓ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க உள்ள படம் அண்ணபூர்ணி. இந்த படத்தை லயோனல் ஜோசுவா இயக்குகிறார். இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

த்ரில்லர் படமாக உருவாகும் அண்ணபூர்ணி படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதுகிறார். ஹெக்டர் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.