லதா மங்கேஷ்கர் மறைவு: மகாராஷ்டிராவில் நாளை விடுமுறை

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் நாளை பொது விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா மற்றும் நிமோனியா காரணமாக, மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 92. அவருடைய உடல் உறுப்புகள் செயலிழந்ததால், அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி மும்பை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நடக்கிறது. இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு நாளை (பிப்ரவரி 7) பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேற்கு வங்க அரசு நாளை அரை நாள் விடுமுறையை அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in