பிரபல நடிகைக்கு கரோனா: வீட்டுக்கு சீல் வைத்தது மாநகராட்சி!

லாரா தத்தா
லாரா தத்தா

பிரபல நடிகைக்கு கரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அவர் வீட்டுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

இந்தியாவில், கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,685 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகை லாரா தத்தாவுக்கு இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லாரா தத்தா
லாரா தத்தா

பிரபல இந்தி நடிகையான லாரா தத்தா, தமிழில் ‘அரசாட்சி’, ‘டேவிட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வரும் லாரா தத்தாவுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். அவர் வீட்டில் சிலருக்கு பரிசோதனை செய்ததில் லாரா தத்தாவுக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அவர் வீட்டுக்கு வெளியே மும்பை மாநகராட்சி ஒட்டியுள்ளது. அதை, மைக்ரோ கன்டைன்மென்ட் பகுதி என்று அறிவித்துள்ள மாநகராட்சி, அவர் வீட்டுக்கு சீல் வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in