‘மொழிக்கும் வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை சார்!’ : அமைச்சர் பொன்முடிக்கு நடிகை யாஷிகா பதில்

‘மொழிக்கும் வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை சார்!’ : அமைச்சர் பொன்முடிக்கு நடிகை யாஷிகா பதில்

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொல்கிறார்கள், ஆனால் இங்கே பானி பூரி விற்பவர்கள் யார் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பிய நிலையில், அவருக்கு நடிகை யாஷிகா ஆனந்த் பதில் அளித்துள்ளார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருவதுடன் அவ்வப்போது கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொல்கிறார்கள், ஆனால் இங்கே பானி பூரி விற்பவர்கள் யார்' என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது வடநாட்டு மீடியாக்களில் பெரிய சர்ச்சையாக்கப்பட்டது. இந்தி படிப்பவர்கள் எல்லாம் பானிபூரியா விற்கிறார்கள் என்று அமைச்சரின் பேச்சு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தும் அமைச்சர் பொன்முடிக்கு சமூக வலைதளம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அதில் "ஒருவரது மொழிக்கும், வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை சார். எல்லோரும் வாழ தேவையான பணம் சம்பாதிக்க தான் முயற்சி செய்கிறார்கள். யாருடைய திறமையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். டீ விற்றவர் தற்போது நாட்டை ஆள்கிறார். பானி பூரி விற்பவரும் குறைந்தவர் அல்ல. அவர்களை கிண்டல் செய்யாதீர்கள்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in