நிலமோசடி: நடிகர் சூரியிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு

நிலமோசடி: நடிகர் சூரியிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு

நிலமோசடி புகார் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷாலிடம் விசாரணை நடத்திய போலீஸார், நடிகர் சூரியிடமும் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்ட வழக்கு குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் சூரி, இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, நடிகர் விஷ்ணு விஷால், அவர் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்று நடிகர் விஷ்ணு விஷால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஆஜர் ஆனார்.

அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது தந்தையிடமும் விசாரணை நடத்தினர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து நடிகர சூரியிடமும் போலீஸார் விசாரணை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in