`இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது'- நடிகை சுஷ்மிதா சென்னின் சகோதரர்

`இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது'- நடிகை சுஷ்மிதா சென்னின் சகோதரர்

``இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இதுபற்றி என் சகோதரியிடம் பேசுவேன்’’ என்று நடிகை சுஷ்மிதா சென்னின் சகோதரர் ராஜீவ் சென் கூறியுள்ளார்.

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, நிதி மோசடியில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2010-ம் ஆண்டு புகார் அளித்தது. அதனடிப்படையில் அமலாக்கத்துறை சார்பில் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தனக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வழக்கு விசாரணையை தவிர்த்த லலித மோடி, லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்நிலையில் பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் பழைய மற்றும் தற்போதைய புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ள லலித் மோடி, அவரை டேட்டிங் செய்வதாகத் தெரிவித்துள்ளார். ”மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுச் சுற்றுலாவை குடும்பத்துடன் முடித்துவிட்டு லண்டனுக்கு இப்போதுதான் திரும்பி இருக்கிறேன். என் ’பெட்டர்ஹாஃப்’ சுஷ்மிதா சென் பற்றி குறிப்பிடத் தேவையில்லை. கடைசியாக ஒரு புதிய தொடக்கம், புதிய வாழ்க்கை’’ என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் மற்றொரு பதிவில், ’’தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக. இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. வெறும் டேட்டிங் மட்டுமே. ஆனால், அதுவும் ஒரு நாள் நடக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி நடிகை சுஷ்மிதா சென்னின் சகோதரர் ராஜீவ் சென் கூறும்போது, ’’இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இதுபற்றி என் சகோதரியிடம் பேசுவேன்’’ என்று கூறியுள்ளார்.

லலித்மோடி- சுஷ்மிதா சென் டேட்டிங் விவகாரத்தை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in