
’லால்சலாம்’ படப்பிடிப்பு தொடங்கி இருப்பதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டப் பலர் நடிக்க இருக்கும் ‘லால்சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் ஐஸ்வர்யாவின் ‘லால்சலாம்’ படத்தின் பூஜை நடந்தது.
நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் தொடங்கி இருப்பதை ஐஸ்வர்யா தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான லொகேஷன் பார்க்கும் பணியில் கடந்த சில மாதங்களாகவே படக்குழு ஈடுபட்டு வந்திருக்கிறது. " அண்ணாமலையார் ஆசியுடன் ‘லால்சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. உங்கள் அனைவரது ஆசியும் வாழ்த்துகளும் தேவை" எனக் குறிப்பிட்டு மகிழ்ச்சியுடன் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.