’மலை’ படத்தில் மருத்துவராகும் லட்சுமி மேனன்

’மலை’ படத்தில் மருத்துவராகும் லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கும் படத்துக்கு ’மலை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சீனு ராமசாமி, சுசீந்திரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஐ.பி.முருகேஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம், ’மலை’. லெமன் லீஃப் கிரியேஷன் சார்பில், கணேஷ் மூர்த்தி செளந்தர்யா தயாரிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுத, யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். லட்சுமி மேனன், யோகி பாபு, காளி வெங்கட், சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி முருகேஷ் கூறும்போது, " இந்தப் படம் மலைப்பகுதி கிராமத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. படத்தில், மலை ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இதில் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் மருத்துவராக லட்சுமி மேனன் நடிக்கிறார். அந்தக் கிராமத்தில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் அவர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது கதை. லட்சுமி மேனனும், யோகி பாபுவும் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால், இருவரின் கதாபாத்திரம் சுவாரசியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்"என்றார்.

Related Stories

No stories found.