பிரபல நடிகரின் வீட்டை விற்க முயலும் மகள்: அரசுக்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்

பிரேம் நஸீர் வாழ்ந்த, லைலா காட்டேஜ்
பிரேம் நஸீர் வாழ்ந்த, லைலா காட்டேஜ்

பழம்பெரும் நடிகர் வீடு விற்பனைக்கு வருவதை அடுத்து, அதை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று அரசுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பழம்பெரும் மலையாள நடிகர் பிரேம் நஸீர். சுமார் 750-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில், தந்தை, மந்திரவாதி, நல்ல இடத்து சம்மந்தம், பாலும் பழமும், முரடன் முத்து, பாவை விளக்கு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 542 படங்களில் ஹீரோவாக நடித்ததற்காகவும் ஒரே ஹீரோயினுடன் (ஷீலா)110 படங்களில் நடித்ததற்காகவும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவர், 1989-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

பிரேம் நஸீர்
பிரேம் நஸீர்

இவர் வாழ்ந்த வீடு, திருவனந்தபுரம் சிரயின்கீழு பகுதியில் இருக்கிறது. லைலா காட்டேஜ் என்ற அந்த வீடு, பிரேம் நஸீரின் மறைவுக்குப் பிறகு அவருடைய இளைய மகள் ரீட்டாவுக்கு பாகபிரிவினையில் சென்றது. பின்னர் ரீட்டா இதை தனது மகளுக்குக் கொடுத்தார். அவர் இப்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதால், இந்த வீட்டை பராமரிக்க ஆள் இல்லை. இதனால், அதை விற்க முடிவு செய்துள்ளனர். இதற்கு பிரேம் நஸீரின் ரசிகர்களும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லைலா காட்டேஜ்
லைலா காட்டேஜ்

பிரேம் நஸீர் மறைந்து 30 வருடங்கள் ஆகிவிட்டாலும் அவர் நினைவுகளுடன் இருக்கும் இந்த வீட்டை சினிமா ஆர்வலர்கள் இப்போதும் பார்த்துவிட்டு செல்கின்றனர். அதனால், இந்த வீட்டை அரசே வாங்கி, நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in