முதல்வர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட குஷ்பு

முதல்வர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட குஷ்பு

சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, நடிகை சுகாசினி ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

80களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. நடிகையாக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த குஷ்பு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர், திமுகவில் இருந்து வெளியேறிய குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். அங்கு ஏற்பட்ட மோதலால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய குஷ்பு, நேரெதிர் சித்தாந்தம் கொண்ட பாஜகவில் தஞ்சம் அடைந்தார். தற்போது, பாஜகவில் தேசிய செயற்குழு சிறப்பு உறுப்பினராக இருந்து வருகிறார் குஷ்பு.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில் இன்று நடைபெற்ற தக்க்ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் பின்னர், முதல்வருடன் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, நடிகைகள் சுகாசினி, லிஸி ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.