சூர்யாவின் `சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் தொடங்கியது

சூர்யாவின் `சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் தொடங்கியது
நடிகர் சூர்யா, அக்‌ஷய் குமார்

சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.

நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, இந்தி நடிகர் பரேஸ் ராவல், கருணாஸ், ஊர்வசி உட்பட பலர் நடித்தபடம், ‘ சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

சூரரைப் போற்று இந்தி ரீமேக் படப்பிடிப்பில், ராதிகா தமன், அக்‌ஷய்குமார், சுதா கொங்கரா
சூரரைப் போற்று இந்தி ரீமேக் படப்பிடிப்பில், ராதிகா தமன், அக்‌ஷய்குமார், சுதா கொங்கரா

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது . சூர்யா நடித்த கேரக்டரில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். அவர் மனைவியாக ராதிகா மதன் நடிக்கிறார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து விக்ரம் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று (ஏப். 25 ) தொடங்கியது. இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, அக்‌ஷய்குமாருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு, புதிய தொடக்கம், உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.