பசுமையான பாடல்களைத் தந்த கே.எஸ்.சித்ராவுக்கு பழசி ராஜா விருது!

பசுமையான பாடல்களைத் தந்த கே.எஸ்.சித்ராவுக்கு பழசி ராஜா விருது!

பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ராவுக்கு இந்தாண்டுக்கான பழசி ராஜா விருது வழங்கப்படுகிறது.

சின்னக்குயில் என்றழைக்கப்படும் சித்ரா, தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள சித்ரா, ஆறு முறை தேசிய விருதையும் மத்திய அரசின் பத்ம விபூஷன் விருதையும் பெற்றவர்.

இவருக்கு இந்தாண்டுக்கான பழசி ராஜா அறக்கட்டளை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு பழசி ராஜா அறக்கட்டளையால், பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்திருப்பவர்கள்க்கு விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, சித்ராவுக்கு வழங்கப்படுகிறது.

ஆகஸ்ட் 16-ம் தேதி கோழிக்கோடு தாகூர் நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் விழாவில், எம்டி வாசுதேவன் நாயர் இந்த விருதை வழங்குகிறார்.

இதுபற்றி அறக்கட்டளையின் செயலாளர் எம்.கே.ரவிவர்ம ராஜா கூறும்போது, தலைமுறைகள் கடந்தும் பசுமையான பாடல்களை தந்ததற்காக இந்த விருது சித்ராவுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in