சூர்யா ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி ஷெட்டி

சூர்யா ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி ஷெட்டி

சூர்யா ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க இருக்கிறார்.

சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படம் சமீபத்தில் வெளியானது. பாண்டிராஜ் இயக்கிய இந்தப் படத்தில், அவர் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார். இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை பாலா இயக்குகிறார். இதில் அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காக மதுரை அருகே பிரம்மாண்ட செட் அமைத்துள்ளனர். விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. பிறகு சென்னையில் ஷூட்டிங் நடக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க இருக்கிறார். இவர், உப்பென்னா, ஷ்யாம் சிங்கா ராய், பங்கர்ராஜூ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். லிங்குசாமி இயக்கும் ’வாரியர்’ படத்தில் நடித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in