கே.எஸ்.ரவிகுமாரின் `கூகுள் குட்டப்பா’ ரிலீஸ் எப்போது?

கே.எஸ்.ரவிகுமாரின் `கூகுள் குட்டப்பா’ ரிலீஸ் எப்போது?

கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ள ’கூகுள் குட்டப்பா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவல் இயக்கிய படம், ’ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’. அங்கு பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, செளபின் ஷாகிர், சூரஜ் தீலக்காடு, சைஜு குருப் உட்பட பலர் நடித்திருந்தனர். சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு பிஜிபால் இசை அமைத்திருந்தார்.

2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், ’கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடித்துள்ளார். அவருடன் தர்ஷன் தியாகராஜா, லாஸ்லியா, யோகிபாபு, சுரேஷ் சந்திர மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர்.

ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ள, இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி மே மாதம் 6-ம் தேதி தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.