கிராமத்துக்குக் கொண்டு சென்ற `கொம்பன்’: கார்த்தி நன்றி

கிராமத்துக்குக் கொண்டு சென்ற `கொம்பன்’: கார்த்தி நன்றி
கொம்பன் - கார்த்தி

என்னை கிராமத்துக்கு மண்ணுக்கு மீண்டும் கொண்டு சென்ற படம் ’கொம்பன்’ என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

நடிகர் கார்த்தி நடித்து 2015-ம் ஆண்டு வெளியான படம், கொம்பன். முத்தையா இயக்கி இருந்த இந்தப் படத்தில் லட்சுமி மேனன், ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன், கருணாஸ், தம்பி ராமையா, கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

கொம்பன் - லட்சுமி மேனன், கார்த்தி
கொம்பன் - லட்சுமி மேனன், கார்த்தி

இந்நிலையில் இந்தப் படம்தான் அறிமுகமாகி 8 வருடத்துக்குப் பிறகு தன்னை மீண்டும் கிராமத்துகு கொண்டு சென்ற படம் என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், ``பையா எனக்கு புத்தம்புது பிம்பத்தை முழுமையாக வெளிப்படுத்த வித்திட்டது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் என்னை கிராமத்து மண்ணுக்கு கொம்பன் அழைத்துச் சென்றது. சுல்தான் மீண்டும் என்னை வாண்டுகளை வசப்படுத்த வைத்தது. இவை எல்லாமே ஒரே வெளியீட்டுத் தேதியில்தான். இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.