கொடைக்கானல்: தங்கும் விடுதி உரிமையாளருக்கு மிரட்டல்; பாபி சிம்ஹா மீது வழக்கு!

பாபி சிம்ஹா
பாபி சிம்ஹா

கொடைக்கானல் காவல் நிலையத்தில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .

பாபி சிம்ஹா பங்களா
பாபி சிம்ஹா பங்களா

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் பிரபல நடிகரான பாபி சிம்ஹா பங்களா கட்டி வருகிறார். இங்கு மூஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த ஜமீர் என்பவர் கட்டிடம் க‌ட்டும் பணிகளை மேற்கொண்டார். 90 சதவிகித பணிகள் முடிந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே பாபி சிம்ஹாவிற்கும் ஒப்பந்தகாரர் ஜமீருக்கும் க‌ட்டிட‌ க‌ட்டுமான‌ ச‌ம்ம‌ந்த‌மாக‌ முரண்பாடுகள் ஏற்பட்டு கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாபி சிம்ஹா ஒப்பந்தகாரருக்கு பல லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஜமீர் அவரது தந்தை இருவரும் பாபி சிம்ஹாவிடம் பணம் கேட்கும் போது முதியவர் என்று பாராமல் ஜ‌மீரின் த‌ந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்தகாரர் ஜமீரின் உறவினரான உஷேன், பாபி சிம்ஹா இருவரும் பள்ளி நண்பர்களாக‌ இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக இந்த கட்டிட பணி ஒப்பந்தம் ஜ‌மீருக்கு கிடைத்துள்ளது.

காவல் நிலையம் கொடைக்கானல்
காவல் நிலையம் கொடைக்கானல்

இதையடுத்து பஞ்சாயத்து ஜமீர் உஷேனிடம் சென்றுள்ளது. உஷேன் பாபி சிம்ஹாவிட‌ம் இது தொடர்பாக பேச முற்பட்ட போது, இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் செண்பகனூர் பகுதியில் உள்ள உஷேனுக்கு சொந்த‌மான தங்கும் விடுதிக்கு கடந்த மாதம் 20ம் தேதி பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகரான ராமசந்திரா ராஜி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் சென்றுள்ளனர். அங்கு இந்த விஷயத்தில் ஜமீர் உசேன் தலையிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும், அதிக சத்தம் எழுப்பியதாகவும் விடுதியில் இருந்த ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து விடுதியின் மேலாளர் காவல் நிலையத்திலும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜிக்கும் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கடந்த 10ம் தேதி தபாலில் வரப்பெற்ற புகார் அடிப்படையில் பாபி சிம்ஹா மற்றும் ராமசந்திரா ராஜி அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,

இதனிடையே கடந்த 1ம் தேதி பாபி சிம்ஹா, கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்பந்தகாரர் ஜமீர் மற்றும் அவரது தந்தை, ஒப்பந்தகாரரின் உறவினர் உஷேன், பேத்துப்பாறை மகேந்திரன் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in