திரைக்கு வரும் முன்பே இந்தியன் பனோரமாவிற்கு தேர்வான 'கிடா'

திரைக்கு வரும் முன்பே இந்தியன் பனோரமாவிற்கு தேர்வான 'கிடா'

உலகம் முழுக்க புகழ்பெற்ற திரைப்பட விழாவாக 80 வருடங்களாக நடந்து வரும் கோவா சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில், 'ஜெய் பீம்' படத்துடன் 'கிடா' என்ற தமிழ்ப் படமும் தேர்வாகி அசத்தியுள்ளது.

பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார். பாடல்களை ஏகாதசி எழுத, எம்.ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் முழுதாக முடிந்தவடைந்த நிலையில், திரைக்கு வரும் முன்னதாகவே கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவா திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் மூன்று தமிழ்ப் படங்களில், ஒரு படமாக 'கிடா' தேர்வாகியுள்ளது.

இப்படத்தை 'கிருமி', 'றெக்க' படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் ரா வெங்கட் இயக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகில் 35 வருடங்களாக பல வெற்றிப்படங்களை தந்த ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in