பிரபல ஹீரோவுக்கு திடீர் உடல் நலக்குறைவு: நிகழ்ச்சிகள் ரத்து

பிரபல ஹீரோவுக்கு திடீர் உடல் நலக்குறைவு: நிகழ்ச்சிகள் ரத்து

பிரபல ஹீரோவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் 'நான் ஈ', 'புலி', 'முடிஞ்சா இவனப்புடி' படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது, ’விக்ராந்த் ரோணா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். அனுப் பண்டாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி , நீதா அசோக் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், 3டி-யில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. வரும் 28-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் பற்றிய புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளவும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவும் முடிவு செய்திருந்தார் சுதீப். இந்நிலையில் அவர் உடல் நிலை சரியில்லாமல் போனதால், தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் இன்று ரத்து செய்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ள சுதீப், ’’சென்னை, கொச்சி மற்றும் ஹைதராபாத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்க இருந்தேன். உடல் நிலை சரியில்லாமல் போனதால் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டேன். இதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உடல் நிலை சரியானதும் மீண்டும் சந்திக்கத் திட்டமிடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in