சுதீப்பின் ‘விக்ராந்த் ரோனா’ ரிலீஸ் தள்ளிவைப்பு

சுதீப்
சுதீப்

சுதீப் நடிக்கும் ’விக்ராந்த் ரோனா’ படத்தில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சுதீப், நிரூப் பண்டாரி, ரவிசங்கர் கவுடா, மதுசூதன் ராவ் உட்பட பலர் நடித்துள்ள படம் ’விக்ராந்த் ரோனா’. அனூப் பண்டாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் சுதீப் திரையுலகுக்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, இந்தப் படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர்.

சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ்
சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ்

3டி-யில் உருவாகியுள்ள இந்தப் படம், பிப்ரவரி 24-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

கரோனா காரணமாக பொங்கலுக்கு வெளியாக வேண்டிய பல்வேறு படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’, அஜித்தின் ’வலிமை’, விஷாலில் ’வீரமே வாகை சூடும்’, பிரபாஸின் ’ராதே ஷ்யாம்’ உட்பட பல படங்களில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ’விக்ராந்த் ரோனா’ படத்தின் ரிலீஸையும் படக்குழு தள்ளி வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in