`அந்த ஹீரோவோட நடிக்கிறேனா?’- பிரபல ஹீரோயின் திடீர் மறுப்பு

`அந்த ஹீரோவோட நடிக்கிறேனா?’- பிரபல ஹீரோயின் திடீர் மறுப்பு

``பான் இந்தியா ஹீரோ ஜோடியாக நடிக்க, யாரும் தன்னை அணுகவில்லை'' என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பாகுபலி படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில் உருவாகின்றன. அவர் நடித்து சமீபத்தில் வெளியான ’ராதே ஷ்யாம்’ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இப்போது பிரசாந்த் நீல் இயக்கும் ’சலார்’ படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்து அமிதாப் பச்சான், தீபிகா படுகோன், திஷா பதானியுடன் ’புராஜக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை நாக் அஸ்வின் இயக்குகிறார்.

இதை அடுத்து ’அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் ரெட்டியின் ’ஸ்பிரிட்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். த்ரில்லர் கதையை கொண்ட இதில் ஹீரோயினை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. ராஷ்மிகா மந்தனா அல்லது பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தில் வாய்ப்பைப் பிடிக்க இருவருக்குள்ளும் போட்டி நடப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கியாரா அத்வானி தரப்பு இதை மறுத்துள்ளது. இந்தப் படத்தில் நடிக்க யாரும் தொடர்புகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள அவர் தரப்பு, ``அப்படி ஏதும் இருந்தால் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்'' என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in