‘என் மகளின் போராட்டம் தொடங்குகிறது’ - குஷ்பு நெகிழ்ச்சி!

‘என் மகளின் போராட்டம் தொடங்குகிறது’ - குஷ்பு நெகிழ்ச்சி!

சினிமா சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகள் தொடர்ந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில், நட்சத்திரத் தம்பதியான இயக்குநர் சுந்தர். சி - குஷ்புவின் மகளும் திரையுலகில் நுழைகிறார்.

அவந்திகா
அவந்திகா

சுந்தர்.சி- குஷ்பு தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் அவந்திகா தான் நடிகையாகக் களமிறங்குகிறார். வெளிநாட்டில் நடிப்புப் பயிற்சிப் பெற்று வந்த அவந்திகா, சமீபத்தில் பயிற்சியை நிறைவுசெய்தார்.

தனது மகள் திரைத் துறைக்கு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் நடிகை குஷ்பு, ‘என் மூத்த மகள் லண்டனில் நடிப்புப் பயிற்சியை முடித்துவிட்டார். அவர் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்க இருக்கிறார். அவரே தனக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விரும்புவதால், அவரது போராட்டம் இப்போது ஆரம்பிக்கிறது. நாங்கள் அவரை அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவதில்லை. அவருக்கு உங்கள் ஆசிர்வாதம் தேவை’ என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குஷ்பு, சுந்தர் சி, அனந்திகா, அவந்திகா
குஷ்பு, சுந்தர் சி, அனந்திகா, அவந்திகா

குஷ்புவை போல அவர் மகளும் சினிமாவில் புகழ்பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in