கே.ஜி.எப் 2ம் பாகம் ஏப்ரல் 14ல் ரிலீஸ்

கே.ஜி.எப் 2ம் பாகம் ஏப்ரல் 14ல் ரிலீஸ்

கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் 14ல் ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த வரைகலை ஆகிய இரண்டு பிரிவுகளின் தேசிய விருது பெற்றது.

இதனிடையே, ஊரடங்கு, கரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு ரிலீஸாக தயாராக இருக்கிறது. இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கே.ஜி.எப். படத்தின் இரண்டாம்பாகம் தமிழ் வெளியிட்டு உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் இப்படம் ஏப்ரல் 14ல் ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Related Stories

No stories found.