ஆயிரம் கோடி வசூல்: சம்பளத்தை உயர்த்தினார் `கே.ஜி.எஃப்’ இயக்குநர்

ஆயிரம் கோடி வசூல்: சம்பளத்தை உயர்த்தினார் `கே.ஜி.எஃப்’ இயக்குநர்

கே. ஜி. எஃப் 2 படம் ஹிட்டானதை அடுத்து, இயக்குநர் பிரசாந்த் நீல் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் 'கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் கடந்த 14-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ரிலீஸ் ஆன நாளில் இருந்தே வசூலைக் குவித்து வரும் இந்தப் படம், உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

இதற்கு முன்பு தங்கல், பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய இந்திய படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் குவித்தன. அந்த வரிசையில் நான்காவதாக கே.ஜி.எஃப்: சாப்டர் 2 இடம்பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ள இயக்குநர் பிரசாந்த் நீல், தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். கே.ஜி.எஃப் 2 படத்தை அடுத்து அவர் பிரபாஸ் நடிக்கும் 'சலார் ' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ரூ.25 கோடி சம்பளம் வாங்கியுள்ள பிரசந்த் நீல், அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

இதை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. அடுத்து ’ஆர் ஆர் ஆர்’படத்தை தயாரித்த டிவிவி தானய்யாவும் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த 2 படங்களுக்கும் தலா ரூ.50 கோடி அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல், கே.ஜி.எஃப் படங்களுக்கு முன், ஸ்ரீமுரளி, ஹரிப்பிரியா நடித்த ‘உக்ரம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in