ராக் ராக் ராக்கி... வைரலாகும் ‘கே.ஜி.எப் சாப்டர் 2’ பாடல்

ராக் ராக் ராக்கி... வைரலாகும் ‘கே.ஜி.எப்  சாப்டர் 2’  பாடல்

‘கே.ஜி.எப் சாப்டர் 2’ படத்தின் ’டூஃபான்’ என்ற பாடல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’கே.ஜி.எப்’. பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இந்தப் படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், கே.ஜி.எப் : சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டியுடன் இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆதிரா என்ற வில்லனாக நடித்துள்ளார்.

யாஷ்
யாஷ்

மற்றும் ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படம் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள டூஃபான் என்ற முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தின் டிரெய்லர் வரும் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in