கே.ஜி.எஃப் சாப்டர் 2 எப்படியிருக்கு?: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

கே.ஜி.எஃப் சாப்டர் 2 எப்படியிருக்கு?: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

'கே.ஜி.எஃப்: சாப்டர் 2' படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள படம் 'கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யாஷ் நடிக்க, அவர் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு, தமிழில் இதை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சியாக இந்தப் படம் வெளியானது. அதிக வரவேற்பு காரணமாக மும்பையில் நள்ளிரவு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டரில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதீராவும் பிரதமர் ராமிகா சென்னும் ராக்கி பாயை காலி செய்ய போராடுகின்றனர். அவர்கள் முயற்சிகள் வென்றதா? இல்லையா? என்பதுதான் இதன் கதை.

ட்விட்டரில், ஒரு ரசிகர், பக்கா ஆக்‌ஷன் படம். யாஷ் நடிப்பு படத்துக்கு பெரிய பலம். வசனமும் பில்டப் காட்சிகளும் சூப்பர். இரண்டாம் பாதியில் கொஞ்சம் சொதப்பல் இருந்தாலும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அருமை என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகர், சூப்பரான ஆக்‌ஷன் என்டர்டெயினர் இந்தப் படம். இயக்குநர் பிரசாந்த் நீல், அடுத்த பாகத்திலும் சிலிர்க்க வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படங்களில், இதன் பின்னணி இசை சூப்பராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு ரசிகர், இந்தப் படத்துக்காக காத்திருந்ததில் தவறில்லை என்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் மிரட்டியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். ஏராளமான ரசிகர்கள் படத்தை பாராட்டி வரும் நிலையில், சிலர் படம் சரியில்லை என்றும் இயக்குநர் ஏமாற்றி விட்டார் என்றும் கூறியுள்ளனர்.

இதேபோல பல ரசிகர்கள் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர். இந்த ட்விட்டர் விமர்சனங்கள் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

Related Stories

No stories found.