’கே.ஜி.எப் 2’ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

’கே.ஜி.எப் 2’ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கே.ஜி.எப் 2 படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து சூப்பர் ஹிட்டான படம், கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இந்தப் படம், பான் இந்தியா படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், ’கே.ஜி.எப்: சாப்டர் 2’ என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.

முதல் பாகம் வெற்றி பெற்றதால், இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆதிரா என்ற வில்லனாக நடித்துள்ளார். யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டியுடன், நடிகை ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 'கே.ஜி.எப் - 2 'திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 27 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு டிரெய்லர் வெளியாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in