மகளிர் தினத்துக்காக, கே.ஜி.எப்: 2 டீம் ஸ்பெஷல் போஸ்டர்

மகளிர் தினத்துக்காக, கே.ஜி.எப்: 2 டீம் ஸ்பெஷல் போஸ்டர்

மகளிர் தினத்தை ஒட்டி, ’கே.ஜி.எப்: சாப்டர் 2’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து சூப்பர் ஹிட்டான படம், கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இந்தப் படம், இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், ’கே.ஜி.எப்: சாப்டர் 2’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

முதல் பாகம் வெற்றி பெற்றதால், இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில், இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆதிரா என்ற வில்லனாக நடித்துள்ளார். யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டியுடன், ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிரெய்லர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, 'கே.ஜி.எப் 2' படத்தில் நடித்துள்ள பெண்களை மட்டும் வைத்து புதிய போஸ்டரை, படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ், ரூபா ராயப்பா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in