அடேங்கப்பா: இன்னொரு சாதனை வசூலில் `கே.ஜி.எஃப் 2’

அடேங்கப்பா: இன்னொரு சாதனை வசூலில் `கே.ஜி.எஃப் 2’

’கே.ஜி.எஃப் சாப்டர் 2’ படம், வெளியான 33 நாட்களில் ரூ.1200.76 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள படம் 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2’. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட மொழிகளில் கடந்த 14-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ரிலீஸ் ஆன நாளில் இருந்தே வசூலைக் குவித்து வரும் இந்தப் படம், உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது.

இப்போது 33 நாளில் ரூ.1200.76 கோடி வசூலித்து இந்தப் படம் மேலும் சாதனை படைத்திருக்கிறது. ஆமிர்கானின் தங்கல், ராஜமவுலியின் பாகுபலி ஆகிய படங்கள் ஏற்கெனவே ரூ.1200 கோடி வசூலை எட்டியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in