இந்தியில் சாதனை: வேற லெவல் வசூலில் ராக்கி பாய்!

இந்தியில் சாதனை: வேற லெவல் வசூலில் ராக்கி பாய்!

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள படம் 'கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் மிரட்டலாக நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் வெளியாகி உள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு, தமிழில் இதை வெளியிட்டுள்ளார். இந்தப் படம் கடந்த 14-ம் தேதி வெளியானது.

வெளிநாடுகள் உட்பட திரையிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தி சினிமாவில் கே.ஜி.எஃப் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை விட, இந்தப் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

வெளியான இரண்டே நாட்களில், உலகம் முழுவது 300 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த இந்தப் படம், 1,000 கோடி ரூபாய் வசூலை இன்னும் சில நாட்களிலேயே எட்டும் என்கிறார்கள். இதற்கிடையே இந்தப் படத்தின் இந்தி பதிப்பு 2 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது. ‘பாகுபலி 2’, ‘தங்கல்’ படங்களின் வசூலைவிட இதன் தொடக்க வார வசூல் சிறப்பாக இருப்பதாகத் திரைப்பட வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.