நடிகர் சிம்பு படத்தில் இணையும் கே.ஜி.எஃப் பிரபலம்!

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு
Updated on
1 min read

நடிகர் சிம்புவின் புதிய படத்தில் ‘கே.ஜி.எஃப்’ பிரபலம் இணைய இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 48வது படத்திற்காகத் தயாராகி வருகிறார். வரலாற்றுக் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடை குறைத்து நீண்ட முடி, அடர் தாடி எனத் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். இந்த புதிய தோற்றத்துடன் சமீபத்தில் லண்டனில் இவருக்கு லுக் டெஸ்ட்டும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிம்புவின் இந்தப் படத்திற்காக ‘கே.ஜி.எஃப்’ படத்தின் மூலம் மிரட்டலான இசையைக் கொடுத்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரைத் தமிழில் அறிமுகப்படுத்த இருக்கின்றனர்.

நடிகர் சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசன்

இதற்கான பேச்சுவார்த்தையைப் படக்குழு தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்பு இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என சொல்லப்பட்ட நிலையில், கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே ரவி பஸ்ரூ இந்தப் படத்திற்குள் வர இருக்கிறார். விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in