`கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது கற்பனைக்கு எட்டாத அந்த நிகழ்வு'- உயிர் தப்பிய கே.ஜி.எஃப் நடிகர் உருக்கம்

`கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது கற்பனைக்கு எட்டாத அந்த நிகழ்வு'- உயிர் தப்பிய கே.ஜி.எஃப் நடிகர் உருக்கம்

கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் பிரபல நடிகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

பிரபல கன்னட நடிகர் பி.எஸ்.அவினாஷ். பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் வெளியான, கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 படங்களில் ஆண்ட்ரூ என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பெங்களூருவில் உள்ள வீட்டில் இருந்து உடற்பயிற்சி கூடத்திற்கு தனது பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே வரும்போது எதிரில் வந்த கன்டெய்னர் லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காயம் ஏதுமின்றி நடிகர் அவினாஷ் தப்பினார். விரைந்து வந்த போலீஸார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரிடம் விசாரித்தனர். இதுபற்றி சமூக வலைதளப் பக்கத்தில் அவினாஷ் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ’’கடந்த புதன்கிழமை காலையில் வாழ்நாள் முழுவதுக்குமான பயத்தை எதிர்கொண்டேன். கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது கற்பனைக்கு எட்டாத அந்த நிகழ்வு. ஜிம்முக்கு சென்றுகொண்டிருந்தபோது, சிக்னலை மீறி வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, என் கார் மீது பயங்கரமாக மோதிவிட்டது. இதில் கடவுள் அருளால் காயம் ஏதுமின்றி தப்பித்தேன். காருக்கு மட்டும் சேதம் ஏற்படுட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in