‘போக்கிரி’களை ‘தெறி’க்கவிடும் கேரள போலீஸ்!

விஜய் படக் காட்சிகளுடன் அவசர உதவி எண் விளம்பரம்
‘போக்கிரி’களை ‘தெறி’க்கவிடும் கேரள போலீஸ்!
விஜய்

‘அவசர எண்’ விளம்பரத்தில் நடிகர் விஜய் நடித்த படங்களின் கிளிப்பிங்ஸை, கேரள போலீஸ் பயன்படுத்தி இருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர், நடிகைகள் நடித்துள்ள சினிமா படக் காட்சிகளை தங்களின் விளம்பரங்களுக்கு போலீஸ் துறையினர் பயன்படுத்துவது சகஜமானதுதான். பொதுவாக, ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் என்பதற்காக, பல்வேறு நடிகர்களின் பட காட்சிகளை போலீஸார் பயன்படுத்தினர்.

இந்நிலையில், காவல் துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்பு, பெண்கள் பாதுகாப்பு என அனைத்துக்கும் மத்திய அரசு 112 என்ற அவசர எண்ணைக் கொண்டு வந்துள்ளது. நாடு முழுதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணாக 112-ஐ அழைக்கும் திட்டத்தின்கீழ், இந்தத் திட்டம் பல மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவிலும் இந்த அவசர உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணை விளம்பரப்படுத்த அம்மாநில காவல் துறை பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த ’போக்கிரி’ மற்றும் ’தெறி’ படக் காட்சிகளை பயன்படுத்தி, விளம்பரம் ஒன்றை உருவாக்கியுள்ளது. போக்கிரி படத்தில் ரயிலில், நடிகை அசினும் அவர் தம்பியும் ரவுடிகளிடம் சிக்க, அப்போது தம்பி போனில் டைப் செய்யும் காட்சியும் அடுத்த நொடி, காவல் துறை உடையில் விஜய் வந்திறங்கும் ’தெறி’ படக் காட்சியையும் வைத்து, இந்த விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.