திலீப்பின் போனை ஒப்படைக்கக் கோரிய வழக்கு: இன்று மீண்டும் விசாரணை

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

நடிகை கடத்தல் வழக்கில், நடிகர் திலீப்பின் கைப்பேசியை ஒப்படைக்கக் கோரிய வழக்கின் விசாரணை இன்று நடக்கிறது.

விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் மற்றும அவர் உறவினர்கள் உட்பட 6 பேரிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவசர மனுவை கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த குற்றப்பிரிவு போலீஸார், விசாரணைக்கு நடிகர் திலீப் ஒத்துழைக்கவில்லை என்றும் செல்போனை அவர் தரமறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

போலீஸார், கைப்பேசியைக் கேட்கக் கூடாது என்றும் விசாரணை அதிகாரிகளை, தான் நம்பவில்லை என்று நடிகர் திலீப் கூறியதாகவும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். விசாரணைக்கு நடிகர் திலீப் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், அவருடைய முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்படும் என்பதை நினைவுபடுத்துவதாக நீதிமன்றம் எச்சரித்தது. பின்னர் கைப்பேசியை சமர்ப்பிக்க அவர் ஏன் பயப்படுகிறார் என்றும் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு மீண்டும் வருகிறது.

இதற்கிடையே, பழைய கைப்பேசியை ஒப்படைக்கக் கோரி குற்றப்பிரிவு போலீஸார் அனுப்பிய நோட்டீஸுக்கு நடிகர் திலீப் பதில் அனுப்பியுள்ளார். அதில் அவர், ‘நடிகை பலாத்காரம் நடந்ததாகக் கூறப்பட்ட 2017-ம் ஆண்டில் பயன்படுத்திய செல்போனை, என்னை கைது செய்தபோது நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டேன். தற்போது ஆஜர்படுத்த கேட்கப்படும் போன், இன்னொருவர் பெயரில் இருப்பது. சில நாட்களாகத்தான் அதைப் பயன்படுத்தி வருகிறேன்.

மூன்றாவதாக ஒரு போன் இருக்கிறது. அதில்தான் பாலசந்திரகுமாரும் நானும் பேசி வந்தோம். அதைத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளேன். நீதிமன்றம் கேட்டால், அதையும் சமர்ப்பிக்கிறேன். இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜூ பவுலோசும் பாலசந்திரகுமாரும் பலமுறை போனில் பேசியுள்ளனர். 2 பேரும் சேர்ந்துதான் என்னை சிக்க வைக்க சதி திட்டம் தீட்டியுள்ளனர். டிஎஸ்பியின் போனை பரிசோதித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in