பாலியல் வன்கொடுமை புகார்: சங்கத்தில் இருந்து இயக்குநர் நீக்கம்

பாலியல் வன்கொடுமை புகார்: சங்கத்தில் இருந்து இயக்குநர் நீக்கம்
லிஜு கிருஷ்ணா

பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ’படவேட்டு’ இயக்குநர் லிஜு கிருஷ்ணா, மலையாள இயக்குநர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நிவின் பாலி நடித்து வரும் மலையாளப் படம், ’படவேட்டு’. இதை நடிகர் சன்னி வெய்ன் தயாரிக்கிறார். மஞ்சு வாரியர், அதிதி பாலன், ஷம்மி திலகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் லிஜு கிருஷ்ணா இயக்குகிறார். இந்நிலையில், லிஜு கிருஷ்ணா, தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும் அந்தப் படத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

லிஜு கிருஷ்ணா
லிஜு கிருஷ்ணா

இதையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த கண்ணூர் பகுதிக்கு சென்ற போலீஸார், லிஜு கிருஷ்ணாவை கைது செய்தனர். இந்நிலையில், நடிகைகள் பார்வதி, கீது மோகன்ஸ்தாஸ், ரீமா கல்லிங்கல், ரேவதி உள்பட பலர் பங்கேற்றுள்ள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு (Women in Cinema Collective), உட்பட பல்வேறு அமைப்புகள், வழக்கு முடியும்வரை கேரள திரைத்துறையில் பணியாற்ற லிஜூ கிருஷ்ணாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், மலையாளத் திரைப்பட இயக்குநர் சங்கம், லிஜு கிருஷ்ணாவை நீக்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in