
மகன் இல்லாததால் தனது மூன்று மகள்களுக்கு மத்தியில் தனது மனைவியை இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்டுள்ளார் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர்.
கேரளா மாநிலம் காசர்கோட் பகுதியைச் சேர்ந்தவர் சுக்கு. 53 வயதான இவர் வழக்கறிஞராக உள்ளார். மலையாள திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவரது மனைவி ஷீனா சுக்கு. இவர் கண்ணூர் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்த தம்பதிக்கு மகன் இல்லாததால் இஸ்லாமிய சட்டத்துப்படி சொத்துக்கள் முழுவதும் மகள்களுக்கு கிடைக்காது. இந்தநிலையில் பெண் குழந்தைகளின் உரிமையை காக்க இஸ்லாமிய மரபுபடி முதலில் திருமணம் செய்து கொண்ட இருவரும், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மறுமணம் செய்து கொண்டனர்.