அம்மாவாக மீண்டும் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்

அம்மாவாக மீண்டும் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்

ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடிக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக `மாமன்னன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். செல்வராகவனுடன் அவர் நடித்துள்ள ’சாணிக்காயிதம்’ ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக ’சர்க்காரு வாரி பாட்டா’ படத்திலும் மலையாளத்தில் வாஷி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

சிரஞ்சீவி சகோதரியாக, போலா சங்கர், நானியுடன் தசரா ஆகிய படங்களின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இதையடுத்து சர்வானந்த் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கிருஷ்ண சைதன்யா இயக்குகிறார். இவர் நிதின் நடித்த சல் மோகன் ரங்கா என்ற படத்தை இயக்கியவர்.

இதனிடையே, உப்பென்னா படத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டியிடம் பேசினர். படத்தில் ஹீரோயின் கேரக்டர் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதால் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த ’பெண்குயின்’ படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அதனால் மீண்டும் அம்மாவாக நடிக்க அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in