’அனிமல்’ இயக்குநரின் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கீர்த்தி சுரேஷ்- பிரபாஸ்
கீர்த்தி சுரேஷ்- பிரபாஸ்

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘அனிமல்’ பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா படக்கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா நடிகர் பிரபாஸூடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் கதாநாயகி யார் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் ஆகியோருடன் மூன்றாவது கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

’அனிமல்’, ‘அர்ஜூன் ரெட்டி’ படங்களில் ஆணாதிக்கம், பெண்கள் கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றிற்காக பல சர்ச்சைகளை சந்தித்தார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. அவரது இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகி என்றால், அதே போன்ற டாக்சிக் கதாபாத்திரத்தை அவருக்கும் கொடுப்பாரா இயக்குநர் சந்தீப் என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

சந்தீப் ரெட்டி வங்கா இப்போது ‘அனிமல்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருப்பதால் ‘ஸ்பிரிட்’ படத்தின் பணிகள் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷூம் தமிழில் ‘ரகுதத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னிவெடி’ மற்றும் பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in