எனக்கும் கரோனா தொற்று: நடிகை கீர்த்தி சுரேஷ்

எனக்கும் கரோனா தொற்று: நடிகை கீர்த்தி சுரேஷ்

தனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர், கரோனாவால் பாதிக்கப்பட்டனர். மூன்றாவது அலையில் இன்னும் அதிகமான பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடிகைகள், த்ரிஷா, குஷ்பு, ஸ்வரா பாஸ்கர், ஷோபனா, மீனா, ரைசா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் கூறியிருப்பதாவது: தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டாலும் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் லேசான அறிகுறிகளை அனுபவித்து வருகிறேன். இந்த வைரஸ் பரவி வரும் வேகம் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தயவு செய்து, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். நான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பான கண்காணிப்பில் இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் இதுவரை தடுப்பூசி செலுத்து கொள்ளாமல் இருந்தால் உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் உடனடியாக செலுத்திக் கொள்ளுங்கள். தொற்றில் இருந்து விரைவில் மீண்டு படப்பிடிப்புக்கு செல்வேன் என நம்புகிறேன்.

இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கீர்த்தியின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in