கரோனாவில் இருந்து மீண்டார் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், அதில் இருந்து குணமடைந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகைகள் குஷ்பு, ஷோபனா, ரைசா வில்சன் உள்ளிட்ட சிலர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் தொற்று உறுதியானது.

கடந்த 11-ம் தேதி இதை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ‘‘தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டாலும் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவி வரும் வேகம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தயவு செய்து, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்’’ என்று சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

’இப்போதைய காலகட்டத்தில், நெகட்டிவ் என்ற சொல்லே பாசிட்டிவான விஷயத்தைக் குறிக்கிறது. உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. பொங்கல்/ சங்கராந்தியை இனிமையாகக் கொண்டாடிருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in