10 கிராம் தங்க நாணயங்கள் பரிசு: 130 பேருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்10 கிராம் தங்க நாணயங்கள் பரிசு: 130 பேருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு 75 லட்ச ரூபாய் செலவழித்துள்ளார்.

நடிகர்கள் நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘தசரா’ திரைப்படம் இந்தமாத இறுதியில் வெளியாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் ஒடேலா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த பான் இந்தியா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ’வெண்ணிலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ’தசரா’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சிங்கரேணி பகுதியில் உள்ள வீர்லப்பள்ளி என்ற கிராமத்தைச் சுற்றி நடக்கும் கதையாக ’தசரா’ உருவாகி உள்ளது.

’தசரா’ படக்குழுவை சேர்ந்த 130 பேருக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் தலா 10 கிராம் தங்க நாணயங்களை, பரிசாக வழங்கி உள்ளார். தற்போதைய தங்கத்தின் விலையை வைத்து பார்த்தால் இவர் கொடுத்த பரிசுகளின் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் இருக்கும். ஒரு கதாநாயகி இவ்வளவு செலவு செய்து பரிசுகள் கொடுப்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் எனப் படக்குழுவினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். படப்பிடிப்பு முடிந்ததும் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் ’தசரா’ படத்திற்காக உழைத்த அனைவருக்கும் மறக்க முடியாத பரிசு வழங்க முடிவு செய்து இதைக் கொடுத்துள்ளார் கீர்த்தி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in