கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்: மனம் திறந்த பெற்றோர்!

கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினர்.
கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினர்.கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்: மனம் திறந்த பெற்றோர்!

நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம் குறித்து அவர் பெற்றோர் மனம் திறந்துள்ளனர்.

நடிகர் நானி, நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த மாதம் இறுதியில் ‘தசரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான புரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷின் பெற்றோர் அவரின் காதல் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர்.

அதில் அவர்கள், ‘சினிமாத் துறைக்கு வந்தாலே இதுபோன்ற பேச்சுகள் வரத்தான் செய்யும். உண்மையில், காதல் ஏதும் இருந்தால் கீர்த்தி எங்களிடமே வந்து சொல்லப் போகிறாள். நாங்களும் பொதுவெளியில் தெரிவிக்கதான் போகிறோம்.

அதனால், கீர்த்தியாக வந்து சொல்லாமலேயே, இதுபோன்று வரும் செய்திகள் குறித்து அவரிடம் கேட்க மாட்டோம். காதல், கிசுகிசு செய்திகள் ஒருவர் மீது அதிகம் வந்தால் அவர் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்றுதான் அர்த்தம். அதனால், இதை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in